எமக்கு வாய்த்த தலைவர் போல்
இப் புவி பந்தில்
எவர்கேனும் வாய்ததுண்டா?
தமிழ் தன் மூச்சென்றார்
பேச்சென்றார்
'தமிழினமே தந்தியடி '...
என்றார்..
கைகோர்த்து
'வீதியில் நில்' என்றார்..
அய்யகோ ..! என்றார்..
வராத கண்ணீரை
துண்டால்
துடைத்து கொண்டார்...!
தானும் அடிமை என்றார்..!
என்னை விட இனத்த்துக்கு
பாடுபட்டோர்
எவரேன்றார்...?
ஈழ நிலம் பிணக்காடாய்
பற்றி எறிதல் கண்டும் -
இலக்கிய நடையோடு
'கடிதங்கள் ' பல கண்டார்...!
வரலாற்றில் பதியதக்க
'உண்ணாவிரதமும்' கண்டார்...!
போர் நின்றது என்றார்
மழைவிட்டாலும்
தூவானம் விடாது என்றார் ....!
எல்லாம் முடிந்து எம் சனமெல்லாம் மடிந்து....
....... ....... ....... ........ .......... .........
கையறு நிலையில்
கலங்கி நிற்கும் தமிழினமே ....
கவலை விடு .....!
இங்குள்ள தமிழினமும்
பூண்டோடு அழிந்தாலும் -
நம் தலைவர் எல்லோர்க்கும் சேர்த்து
இரங்கற்பா வடித்திடுவார் .....!
எமக்கு வாய்த்த தலைவர் போல்
இப் புவிபந்தில்
எவர்க்கேனும் வாய்த்துண்டா ......?
சிவ.அருளமுதன்
(தமிழர் கண்ணோட்டம் 2009 சூலை மாத இதழில் வெளியான கவிதை)
Monday, July 27, 2009
Subscribe to:
Posts (Atom)